பெரதெனியா பொலிஸ் நிலையத்தில் 5 பேருக்கு கொரோனா!

பெரதெனியா பொலிஸ் நிலையத்தின் மேலும் ஐந்து பொலிசார் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கண்டி பிரிவுக்கு பொறுப்பான எஸ்.எஸ்.பி சுதத் மாசிங்க தெரிவித்தார்.

இதையடுத்து, அந்த பொலிஸ் நிலையத்தின் அனைத்து பொலிசாரும் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். இன்று முதல் (19) பதில் ஓ.ஐ.சி தலைமையில் 50 பொலிசார் பெரதெனியா பொலிஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பெரதெனியா பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரி ஒருவர் ஏற்கனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, அ்த பிரிவிலிருந்து பொலிசார் நேற்று முன்தினம் பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதில் 4 பொலிசார் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதில் 2 பெண், 2 ஆண் பொலிசார் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here