கொரோனாவால் வீழ்ச்சியடைந்த மீன்பிடி தொழில்: மன்னார் பெண்கள் புது முயற்சி!

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவ பெண்கள் குழுவினர் தற்போதைய சூழ் நிலையில் தமது பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நமது முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதற்கமைவாக தமது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் தற்போது பிரதான தொழிலாக கொண்ட மீன் பிடித் தொழிலில் மீன்கள் ஏற்றுமதி இன்மையால் மீன்களை நியாய விலையில் கொள்வனவு செய்து அவற்றினை கருவாடாக பதனிட்டு புதிய சந்தை விற்பனையை ஏற்படுத்துவதற்காக தமது முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மன்னர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனமானது நாட்டில் ஏட்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை கருத்தில் கொண்டு பாதுகாப்பு செயன் முறையினை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றது.

அதற்கமைய கோவிட்-19 தொற்று காரணமாக மீனவர்கள் தமது மீன்களை சந்தை படுத்துவதில் தொடர்ச்சியாக பாரிய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

இக்காலப்பகுதியில் மன்னர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினால் வடமாகாணத்தில் உருவாக்கப்பட்டுள்ள மீனவ பெண்கள் குழுக்களினூடாக சந்தை படுத்த முடியாத மீன்கள் சிலவற்றை மன்னாரில் நியாய விலையில் கொள்வனவு செய்யப்பட்டு கருவாடு பதனிடும் செயட்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறாக பதனிடப்படட கருவடுகள் பொதி செய்யப்பட்டு சந்தைப்படுத்தலுக்கு தயாராகியுள்ளது .

குறித்த பணியில் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக குறித்த நடவடிக்கைகள் மன்னார் மற்றும் மாந்தை மேற்கு பிரதேசச் பிரிவுக்குற்பட்ட மீனவ கிராமங்களிலும் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here