வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் மாமியின் வைத்திய அறிக்கை பெற பேருந்தில் சென்றார்

தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, மாலிகாவத்தை பகுதியிலிருந்து, பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்த ஒருவரை, தம்புள்ளை பொதுச்சுகாதார பரிசோதகரும் பொலிசாரும் பஸ்ஸில் இருந்து இறங்கியுள்ளனர்.

அவர் இன்று பிற்பகல் தம்புள்ள ஆதார மருத்துவமனையின் கொரோனா விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அந்த நபர் பேருந்தில் பயணிக்கிறார் என்ற தகவலின் பேரில் பேருந்து சாரதி, நடத்துனர், பம்பை தம்புல்ல மருத்துவமனைக்கு அருகே நிறுத்தினர்.

மாளிகாவத்தையில் உள்ள குடும்பத்தில் பலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளனர். அவரது மாமியார் கொரொனா தொற்று ஏற்பட்டு வெலிக்கந்த ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்திருந்தார். அவரது சடலம் தகனம் செய்யப்பட்டது.

அவரது மனைவிக்கும் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது .

அவரது உறவினர் ஒருவர், மாமியாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியதையடுத்து, அறிக்கையை பெற வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அவர் பஸ்சில் செல்லும் தகவல் கிடைத்ததும், தம்புள்ள பகுதியில் பேருந்தை மறித்து அவரை கீழே இறக்கினர்.

அவருடன் பேருந்தில் பயணித்தவர்கள் பற்றிய விபரத்தை சுகாதார அதிகாரிகள் பெறும் முயற்சியில் ஈடுபட்டள்ளனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here