போகம்பர சிறைச்சாலையிலிருந்து தப்பிச்சென்ற கைதி சிக்கினார்!

கண்டி பழைய போகம்பர சிறைச்சாலை தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து தப்பிச் சென்ற கைதி இன்று (18) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

மத்திய மாகாண கல்வித் திணைக்கள வளாகத்தில் பதுங்கியிருந்தபோது, இன்று மாலை பொலிசாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் நேற்று இரவு (17) சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். நேற்று இரவு, கைதிகள் குழுவொன்று சிறையிலிருந்து தப்பிக்க முயன்றது. இதன்போது சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். மூவர் காயமடைந்தார். அவர்கள் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தப்பிச்சென்ற கைதியை பிடிக்க விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறை கண்காணிப்பாளரின் மேற்பார்வையில் ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here