66 ஆக உயர்ந்தது கொரோனா மரணங்கள்!

இலங்கையில் மேலும் 5 கொரோனா மரணங்கள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மொத்த உயிரிழப்புக்கள் 66 ஆக உயர்ந்துள்ளது.

கொழும்பு 10 ஐச் சேர்ந்த 65 வயது ஆண் கோவிட் தொடர்பான உயர் இரத்த அழுத்தம் காரணமாக வெலிக்கந்த மருத்துவமனையில் உயிரிழந்தார். புணானை சிகிச்சை மையத்திலிருந்து வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவர்.

இரத்மலனவில் வசிக்கும் 69 வயது பெண் கோவிட் தொடர்பான நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக வீட்டில் உயிரிழந்தார்.

கிருலபனவில் வசிக்கும் 71 வயது பெண் கோவிட், தொடர்புடைய நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக வீட்டில் உயிரிழந்தார்.

கொழும்பு 02 இல் வசிக்கும் 81 வயது பெண் கொவிட் தொடர்பான நிமோனியா காரணமாக தேசிய மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தெமடகொடாவைச் சேர்ந்த 82 வயது ஆண் கோவிட் தொடர்பான நீரிழிவு நோயால் வீட்டில் இறந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here