தமிழ் பதிப்பாளுமை க்ரியா ராமகிருஷ்ணன் கொரோனாவால் உயிரிழப்பு!

முன்னோடித் தமிழ்ப் பதிப்பாளரும், க்ரியா பதிப்பகத்தின் பதிப்பாசிரியருமான க்ரியா ராமகிருஷ்ணன் (76) காலமானார். தமிழ்ப் பதிப்புலகின் மூத்த முதுபெரும் ஆளுமை க்ரியா ராமகிருஷ்ணன் ஆவார். அவரது க்ரியா தமிழ் நவீன அகராதி காலந்தோறும் தலைமுறைதோறும் தமிழருக்கு வழிகாட்டக் கூடியது.

கொரோனா பாதித்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார்.

க்ரியா பதிப்பகம் மூலம் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி உள்ளிட்ட பல புத்தகங்களை பதிப்பித்தவர். புத்தகப் பதிப்புத் துறையில் பல்வேறு தொழில்நுட்பங்களை புகுத்தியவர். இத்துறையின் முன்னோடியாகவும் விளங்கியவர் க்ரியா ராமகிருஷ்ணன்.

கடின உழைப்பில் உருவான க்ரியா தமிழ் நவீன அகராதி முக்கியமான பதிப்பு. மரணப்படுக்கையிலும் அந்நூலை விரிவுபடுத்தி வெளியிடுவதில் முனைப்பு கொண்டிருந்தார்.

அதோடு, ந.முத்துசாமியுடன் இணைந்து கூத்துப்பட்டறை ஆரம்பித்தது, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்ததும் குறிப்பிடத்தக்கது. மொழிக்காக இயங்கும் மொழி அறக்கட்டளையையும் க்ரியா ராமகிருஷ்ணன் உருவாக்கியவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here