கொரோனா மரணங்களை ரஷ்யா மறைக்கிறது: சடலங்களின் படங்களை வெளிட்ட அழகி!

ரஷ்யாவில் அறிவிக்கப்படும் கொரோனா உயிரிழப்பை விட மிக அதிக உயிரிழப்பு பதிவாகுவதாக தான் நம்புவதாக, ரஷ்யாவின் முன்னாள் அழகுராணி ஓல்கா ககர்லிட்ஸ்காயா (37) சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் உயிரிழந்த தனது தந்தையின் சடலத்தை கண்டுபிடிக்க சென்றபோது, சவக்கிடங்கொன்றில் குவித்து வைக்கப்பட்டுள்ள சடலங்களின் படங்களையும் வெளியிட்டு இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்

ஓல்கா ககர்லிட்ஸ்காயா, தென்மேற்கு ரஷ்யாவில் உள்ள சமார நகரில் ஒரு சவக்கிடங்கில் இருந்து தனது தந்தையின் உடலை அடையாளம் கண்டு, பெற்றுக் கொண்டிருந்தபோது அதிர்ச்சியூட்டும் காட்சியை படமாக்கினார்.

ரஷ்யாவில் உண்ணமையான கொரோனா இறப்பு பதிவுசெய்யப்படுவதில்லையென்ற கருத்துக்கள் நிலவும் சூழலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இன்று திங்கள்கிழமை, ரஷ்யா 22,778 புதிய கொரோனா தொற்றாளர்களை பதிவு செய்துள்ளது. இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையை 1,948,603 ஆக உயர்த்தியுள்ளது.

கோவிட் -19 நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரியும் போது அவரது தந்தை ஜெனடி ககர்லிட்ஸ்காயா கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டார் என்று ஓல்கா கூறினார்.

கொரோனா உயிரிழப்புக்கள் அதிகமாக உள்ளதாகவும், ஏராளம் சடலங்கள் சவ அறைக்கு வருவதாக அங்குள்ள ஊழியர்கள் தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறிள்ளார்.

பணியிலிருந்து உயிரிழப்பவர்களிற்கு வழங்கப்பட வேண்டிய 22,600 டொலர் இழப்பீட்டை வழங்காமல் தவிர்க்க, தனது தந்தை கொரோனாவால் உயிரிழக்கவில்லையென அதிகாரிகள் பொய் சொல்வதாகவும் அவர் கூறியுள்ளார். இது வழக்கமான நடைமுறையாக மாறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“அவர் ஒரு இராணுவ மருத்துவ அதிகாரி. அவர் விடுமுறையிலிருந்து திரும்பி வந்து வேலையில் நோய்வாய்ப்பட்டார்.”

ஓல்காவின் அப்பா 23 ஆண்டுகளாக பணிபுரிந்த இராணுவ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் பெற இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று அவர் கூறினார்.

ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இரண்டு வாரங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றார். அவர் வென்டிலேட்டரில் போடப்பட்டார், ஆனால் பின்னர் இறந்தார்.

அரசது மரணச்சான்றிதழில் மாற்றம் செய்யப்பட்டு, கொரோனா உயிரிழப்பு அல்ல என குறிப்பிட முயற்சி நடப்பதாக வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்ததாகவும் கூறினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here