இலங்கை விமானப்படை வரலாற்றில் விமானிகளாக நியமிக்கப்பட்ட இரண்டு பெண்கள்!

இலங்கை விமானப்படையின் வரலாற்றில் இன்று (16) இரண்டு பெண்கள் பொதுக்கடமைகள் விமானிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சீனக்குடாவில் உள்ள விமானப்படை அகடமியில் கலாசாலையில் இன்று காலை நடைபெற்ற இலங்கை விமானப்படையின் அதிகாரிகளின் பயிற்சி முடிவு அணிவகுப்பு நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன கலந்து கொண்டார்.

இலங்கை விமானப்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் அழைப்பின் பேரில் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

ஜனாதிபதி வர்ணம், ஒன்பதாவது விமானங்கள் உள்ளடங்களாக 3 ஸ்கொட்ரனினால் வழங்கப்பட்ட மரியாதை அணிவகுப்பை பாதுகாப்புச் செயலாளர் இதன்போது ஏற்றுக்கொண்டார்.

இலங்கை விமானப்படை வரலாற்றில் ஜனாதிபதி வர்ண அணிவகுப்பை பெண் அதிகாரியொருவர் தலைமை தாங்கிய முதலாவது சந்தர்ப்பம் இன்றாகும். ஆர்.டி.வீரவர்தன இந்த பெருமையை பெற்றார்.

பயிற்சிகளை முடித்துக் கொண்ட 53 அதிகாரிகள் கமிஷன் அதிகாரிகளாக இன்று வெளியேறினர். இவர்களில் இரண்டு பெண் அதிகாரிகளும் அடங்குவர். இலங்கை விமானப்படையின் வரலாற்றில் இரண்டு பெண் அதிகாரிகள் விமானிகளாக வெளியேறியுள்ளது இதுவே முதல் முறையாகும்.

பைலட் அதிகாரி ஏடிபிஎல் குணரத்ன மற்றும் பைலட் அதிகாரி ஆர்.டி.வீரவர்தன ஆகியோர் விமானிகளாக நியமிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில், பைலட் அதிகாரி ஆர்.டி.வீரவர்தனவுக்கு, Sword of Honour கௌரவம் வழங்கப்பட்டது. இலங்கை விமானப்படை வரலாற்றில் ஒரு பெண் அதிகாரிக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here