கல்முனை கார்மேல் தேசிய பாடசாலையில் 87 மாணவர்கள் சித்தி!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கல்முனை கல்வி வலயத்தில் இம்முறை 2020 ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 3068 மொத்தமாக பரீட்சைக்கு தோற்றினர்.இவர்களில் 377 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளர் என கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவேனேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதில் கல்முனை வலயத்தில் கல்முனைக் கோட்டத்தில் 109 மாணவர்களும்,கல்முனை தமிழ் பிரிவு கோட்டத்தில் 115 மாணவர்களும், சாய்ந்தமருது கோட்டத்தில் 60 மாணவர்களும், காரைதீவு கோட்டத்தில் 37 மாணவர்களும், நிந்தவூர் கோட்டத்தில் 56 மாணவர்களும் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

மேலும் கல்முனை கோட்டம் மற்றும் கல்முனை தமிழ் பிரிவு கோட்டம் கடந்த வருடத்தை விட சித்தி பெற்றோர் அதிகரித்துள்ளனர். காரைதீவு நிந்தவூர் சாய்ந்தமருது கோட்டங்களில் சித்தியடைந்த வீதம் கடந்த வருடத்தை விட சற்று குறைந்துள்ளது.

பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் இதுவே உங்களது இறுதி பரீட்சை என எண்ணாமல் கா.பொ.த சா/த மற்றும் உயர்தர பரீட்சைகளில் சித்தி பெற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குறித்த இப்பரீட்சைகளில் வெட்டுப்புள்ளிக்கு குறைந்த புள்ளிகளை பெற்ற மாணவர்கள் இதனை ஒரு பாடமாக கொண்டு எதிர்காலத்தில் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் ஆர்வம் கொண்டு இடம்பெறவுள்ள பரீட்சைகளில் சித்திகளை பெற்று சமூகத்தில் சிறந்த மாணவர்களாக மிளிர சகல முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் சாய்ந்தமருது கோட்டத்தில் அல் ஹிலால் பாடசாலையில் அதிகூடிய புள்ளியாக 190 காணப்படுகின்றது. இதுவே எமது வலயத்தில் பெறப்பட்ட அதிக புள்ளியாக காணப்படுகின்றது. இது தவிரஅதி கூடிய மாணவர்களை சித்தி பெற வைத்துள்ள பாடசாலையாக கல்முனை தமிழ் கோட்டத்திலுள்ள கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை காணப்படுகின்றது.

இப்பாடசாலையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் 87 மாணவர்களை சித்தி பெற வைத்துள்ளது. இம்மாணவர்கள் அனைவருக்கும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

-பா.டிலான்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here