அதிரடியாக நுழைந்த கஜன் எம்.பி தலைமையிலான அணி; சுற்றிவளைத்த படையினர்: வன்னிவிளாங்குளத்தில் பரபரப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்ல வளாகம் சிரமதான பணிமூலம் துப்பரவு செய்யம் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்ல வளாகத்தை சூழ படையினரும் பொலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் மக்கள் ஆகியோர் இணைந்து இந்த துப்பரவு பணியினை முன்னெடுத்தனர்.

இதன் போது வன்னிவிளாங்குளம் வீதி முழுவதும் பொலீசார் மற்றும் படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் வீதியால் செல்பவர்களை விசாரிக்கும் நடவடிக்கையிலும் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.
.
காலை முதல் நண்பகர் 1.00 மணிவரை நடைபெற்ற சிரமதான பணியின் போது சுகாதார விதிமுறைகளை பின்பற்றி சிரமதானத்தில் ஈடுபட்டாலும் சிரமதானம் முடியும் வரை அவர்களை படையினர் பொலீசார் ஒளிப்படம் எடுத்து கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here