கொரோனா காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் கலந்துரையாடல்

கொரோனா வைரஸ் இடர் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் வியாபார உரிமையாளர்களுக்கு விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடல் ஓட்டமாவடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் தலைமையில் ஓட்டமாவடி பிரதேச செயலகம் மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவிலுள்ள முச்சக்கரவண்டி மற்றும் வேன் சாரதிகள், இறைச்சிகடை உரிமையாளர்கள், பலசரக்கு கடை உரிமையாளர்கள், மருந்துக் கடை உரிமையாளர்கள், மரக்கறி, மீன் வியாபாரிகள், சுப்பர் மார்க்கட் உரிமையாளர்கள் ஆகியோருக்கு கொரோனா பாதுகாப்பு தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதன் காரணமாக மக்களின் பாதுகாப்பு கருதி ஊரடங்கு தளர்த்தப்படும் சந்தர்ப்பத்தில் உரிமையாளர்கள் மக்களின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வாறு சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று விளக்கங்கள் வழங்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், ஓட்டமாவடி பிரதேச செயலக கணக்காளர் அஹமட் சஜ்ஜாத், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம.எம்;.றுவைத், அனர்த்த சேவைகள் உத்தியோகத்தர் எம்.அஷ்ரப், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர், செயலக உத்தியோகத்தர்கள், வியாபார நிலைய உரிமையாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

ஓட்டமாவடி பிரதேச செயலகம் மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக கொரோனா பாதுகாப்பு தொழில்நுட்ப வழிகாட்டல் அணியின் வளவாளர்களால் கொரோனா வைரஸ் இடர் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச செயலகம், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம், ஓட்டமாவடி பிரதேச சபை, வாழைச்சேனை பிரதேச சபை, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், வாழைச்சேனை பொலிஸ் ஆகிய திணைக்களங்கள் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் இடர் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் உரிமையாளர்களுக்கு விளக்கமளிக்கும் விசேட கலந்துரையாடலை ஏற்பாடு செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here