வில்பத்து குடியேற்றம் சட்டவிரோதமானது; ரிசாத் பதியுதீனின் சொந்த செலவில் மீளவும் மரம் நடப்பட வேண்டும்: மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!

வில்பத்து வனப்பகுதியில் அமைக்கப்பட்ட குடியேற்றம் சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மீள்குடியேற்ற திட்டத்திற்காக வில்பத்து வனத்தில் கல்லாறு பகுதியில் காடழிக்கப்படுவதாக தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

அங்கு ஆயிரக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றிற்கு பதிலாக ரிசாத் பதியுதீனின் சொந்த செலவில் அந்த பகுதியில் மரங்கள் நடப்பட வேண்டும் என்றும், வழக்கு செலவையும் ரிசாத் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here