கோப்பாயில் இரத்ததானம்!

முன்னாள் வலி கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் காலஞ்சென்ற இ.செந்தூரனின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தானம் வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (13) அன்று கோப்பாய் வடகோவை மகிழடி உக்கிரவைரவர் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வயது, பால் வேறுபாடின்றி சுமார் 60இற்கும் மேற்பட்டோர் இரத்ததானம் வழங்கியிருந்தனர்.

இந்நிகழ்வை மகிழடி நண்பர்கள் முன்னெடுத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here