யுனிற்றரிக்கு ஆதரவில்லை: ரெலோ தலைமைக்குழுவில் பேசியது இதுதான்!

ரெலோ தலைமைக்குழுவின் கூட்டம் இன்று வவுனியாவில் இடம்பெற்றது. ஊடகவியலாளர்களிற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மிகமிக இரகசியமாக நடந்த கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்களை தமிழ்பக்கம் திரட்டியுள்ளது.

இன்றைய கூட்டத்தின் தொடக்கத்தில், எம்.எ.சுமந்திரனின் கருத்துக்கள் தொடர்பில் ரெலோவின் அபிப்பிராயஙகளை பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நடந்த கூட்டத்தில், கட்சி மாநாடு தொடர்பில் ஆராயப்பட்டது. இம்மாதம் 28,29ம் திகதிகளில் மட்டக்களப்பில் கட்சி மாநாட்டை நடத்துவதென்றும், 15ம் திகதி தொடக்கம் 24ம் திகதி வரையில் மாவட்ட மட்ட செயற்குழுக்களை தெரிவுசெய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

பின்னர் அரசியலமைப்பு விவகாரம் ஆராயப்பட்டது. புதிய அரசியலமைப்பில் நாட்டின் இயல்பில் ஒற்றையாட்சி தன்மை தெரிந்தால், அதை ஆதரிப்பதில்லையென்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் இயல்பு ஏக்கிய ராஜ்ஜிய என சிங்கத்திலும், தமிழில் ஒருமித்த நாடு என்றும் குறிக்கப்படுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், ஆங்கிலத்தில் யுனிற்றரி என குறிப்பிடப்பட்டால்- அது ஒற்றையாட்சியை வார்த்தைகளில் மறைக்கும் காரியம் என்பதால், அந்த அரசியலமைப்பை ஏற்பதில்லையென முடிவாகிறது.

அப்படியான சமயத்தில் தமிழரசுக்கட்சி மட்டும் விடாப்பிடியாக அதை ஆதரித்தால், தமிழரசுக்கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளாமல், புதிய அணியாக செயற்படுவதென்றும் முடிவாகியது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here