அரியாலையை விடாத கொரோனா: மேலுமொருவர் அடையாளம் காணப்பட்டார்!

யாழ்ப்பாணம் அரியாலையை சேர்ந்த ஒருவருக்கு கொழும்பில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பிரித்தானியாவில் வசிக்கும் குறிப்பிட்ட நபர், கடந்த ஒரு வருடமாக யாழ்ப்பாணம்- அரியாலையிலுள்ள தனது வீட்டில் தங்கியிருந்துள்ளார். மீண்டும் பிரித்தானியா செல்வதற்காக கடந்த 9ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு கொழும்பு சென்றவர், கடந்த 11ஆம் திகதி மேற்கொண்ட பிசிஆர் சோதனையில் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் ஏற்கனவே சில தடவைகள் கொழும்பு சென்று வந்துள்ளார்.

அவருடன் தொடர்பில் இருந்த 12 குடும்பங்களை சேர்ந்த 28 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் தனித்து தங்கியிருந்த அந்த நபர், வெளியாட்களிடமிருந்து உணவை ஓர்டர் செய்து பெற்றுக்கொண்டுள்ளார். முச்சக்கர வண்டியில் பல இடங்களிற்கும் பயணம் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here