UPDATE: பளையில் மர்மநபர்கள் பயங்கரம்; நடுவீதியில் வெட்டிக்கொல்லப்பட்ட குடும்பஸ்தர்: பதற வைக்கும் படங்கள்!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட தம்பகாமம்
மாமுனை ஆற்றங்கரை காட்டுப் பகுதி வீதியில் இனம் தெரியாத நபர்களால்
மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது வாள்வெட்டு இடம் பெற்றுள்ளது.

வாள் வெட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக பளை
போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது கிளிநொச்சி பளை பகுதியில்
அமைந்துள்ள பழக்கடை ஒன்றில் பழங்கள் வேண்டி விட்டு வாள் வெட்டுக்கு
இலக்கான நபர் தம்பகாமம் மாமுனை ஆற்றங்கரை காட்டு வீதியினூடாக மாமுனை
நோக்கி பயணித்த வேளை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாள்வெட்டுக்கு இலக்கான நபர் மாமுனை பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம்
குலசிங்கம் என்னும் 40 வயதுடைய நபர் என முதற்கட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழ் பக்கத்தின் செய்திகளை ஜேவிபி நியூஸ், ஒன்லைன் யப்னா முதலான பல இணையங்கள் மீள்பதிவு செய்தி வருகின்றன. செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தமிழ்பக்கத்துடன் இணைந்திருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here