கணவன்- மனைவி பிடுங்குப்பாடு: நடு வீதியில் அநாதரவாக விடப்பட்ட 5 வயது சிறுவன்!

கணவன்- மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறையடுத்து, அவர்களின் 5 வயது பிள்ளையை நடு வீதியிலேயே விட்டுச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் இந்த சம்பவம் நடந்தது.

மனைவியுடன் தகராற்றில் ஈடுட்ட கணவன், 5 வயது மகனை நித்திரையிலிருந்து எழுப்பி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். வழியில் பொலிசார் நிற்கிறார்கள் என்பதை அறிந்து, மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தியுள்ளார். இதன்போது கட்டுப்பாட்டையிழந்து மோட்டார் சைக்கிள் விபத்திற்குள்ளானது.

விபத்தில் மகன் காயமடைந்துள்ளார். அவரை நடு வீதியிலேயே விட்டு விட்டு தந்தை தப்பியோடி விட்டார்.

காயங்களுடன் வீதியில் அநாதரவாக நின்ற சிறுவனை சாவகச்சேரி பொலிசார், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்த்தனர். 3 நாட்கள் பொலிசாரின் பாதுகாப்பில் சிறுவன் சிகிச்சை பெற்றான்.

சிறுவன் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் இருந்த செய்தியை பத்திரிகையில் படித்து அறிந்ததும், தாயார் வைத்தியசாலைக்கு சென்று சிறுவனை பொறுப்பேற்றார். சிறுவன் தற்போது யாழ் போதனா வைத்தியாரையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுவனின் பெற்றோர் கடந்த 5 ஆண்டுகளக பிரிந்து வாழ்கிறார்கள். சம்பவ தினத்தில் மதுபோதையில் வீட்டுக்கு சென்ற கணவன், மனைவியை கடுமையான தாக்கியுள்ளார். இதையடுத்து அவர் வீட்டிலிருந்த தப்பியோடியுள்ளார்.

இதையடுத்து நித்திரையிலிருந்த மகனை தந்தை தன்னுடன் அழைத்து சென்ற போதே விபத்தில் சிக்கினார்.்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here