சுகாதார அமைச்சின் பேச்சாளரின் காற்று பிடுங்கப்பட்டது!

சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளராக பணியாற்றி வந்த வைத்தியர் ஜெயருவன் பண்டாரா, அந்தப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தொலைபேசியில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, பதவியில் இருந்து விலகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிவித்துள்ளார்.

“பவித்ரா வன்னியராச்சி நேற்று என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கோவிட் -19 நிலைமை தொடர்பான தகவல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் தெரிவிக்கப்படுவதால், சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளராக நான் தொடர வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.

சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளராக பணியாற்றுவதற்கான பொறுப்பை ஏற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டபோது அவருக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பதவி விலகும்படி கேட்டபோது அவருக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை“ என்று வைத்தியர் ஜெயருவன் பண்டாரா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here