முல்லைத்தீவில் மூன்று வருடங்களை கடந்தும் புனரமைக்காது இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாலம்

முல்லைத்தீவில் மூன்று வருடங்களை கடந்தும் புனரமைக்காது இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாலம்

முல்லைத்தீவு கோயில்குடியிருப்பு A35 பிரதான வீதி பாலம் முழுமையாக திருத்தப்படாமையால் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

முல்லைத்தீவு – கோயில்குடியிருப்பு கிராமசேவையாளர் பிரிவு A35 பிரதான வீதியில் காணப்படும் பாலம் மிகவும் சேதமடைந்திருந்த நிலையில் கடந்த மார்ச் 2017 ஆண்டு வீதி திருத்தும் பணி ஆரம்பமாகியிருந்தது.

இந்த நிலையில், மூன்று வருடங்களை கடந்த நிலையிலும் இன்னும் அவ் வீதி புனரமைக்கப்படவில்லை.

இதனால் மழைக்காலங்களில் அவ் வீதியால் பயணிக்கும் பாடசாலை மாணவர்கள் முதல் அவ்வீதியால் பயணம் செய்யும் ஏனைய பயணிகளும் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

எனினும் பாலத்தை புனரமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று வருடங்களை கடந்தும் மீள் புனரமைப்பு வேலைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என அப் பகுதி மக்கள் கவலை வெளியிட்டிருப்பதுடன் குறித்த பாலத்தை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுத்து சீரான போக்குவரத்திற்கு வழியேற்படுத்தி தருமாறும் கோரியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here