பொகவந்தலாவை இளைஞனிற்கு கொரோனா!

பொகவந்தலாவை பகுதியில் இளைஞன் ஒருவரிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொழும்பிலிருந்து பொகவந்தலாவைக்கு வந்த இளைஞன், தானாக சென்று பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதன்போது அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

கொழும்பிலுள்ள பொலித்தீன் கடையொன்றில் பணியாற்றும் இந்த இளைஞன் கடந்த 10ஆ்ம் திகதி பேருந்தில் ஹட்டன் வந்து, அங்கிருந்து முச்சக்கர வண்டியில் பொகவந்தலாவை சென்றுள்ளார்.

அவர் தீபாவளி பண்டிகையை நண்பர்கள், குடும்பத்தினருடன் இணந்து கொண்டாடியுள்ளார். அத்துடன், அந்த பகுதியில் நடமாடியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here