பிரதேசசபை வாகனத்தில் மனைவியை ஏற்றி இறக்கும் தவிசாளர்: வீடியோ ஆதாரம்!

0

வலிகாமம் வடக்கு பிரதேசசபை தவிசாளரும், மாவை சேனாதிராஜாவின் உதவியாளருமான சோ.சுகிர்தன், பிரதேசசபைக்கு சொந்தமான வாகனத்தை தனது சொந்த தேவைக்கு பயன்படுத்தி வருகிறார் என்பதை தமிழ்பக்கம் வெளிச்சமிட்டிருந்தது. தனது மனைவியை பாடசாலைக்கு ஏற்றியிறக்கும் வேலையை, பிரதேசசபைக்கு சொந்தமான வாகனத்தின் மூலமே செய்து வருகிறார் என பிரதேசசபை உறுப்பினர்கள் உள்ளூராட்சி உதவி ஆணையாளரிற்கு முறைப்பாடும் அனுப்பியுள்ளனர்.

மல்லாகத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து தினமும் மாதகலில் உள்ள மனைவி கற்பிக்கும் பாடசாலைக்கு, பிரதேசசபைக்குரிய வாகனத்தில் கொண்டு சென்று இறக்குவதும், மதியம் ஏற்றிவருவதும் தினமும் நடக்கும் விடயம் என முறையிட்டிருந்தனர். கடந்தமுறை தவிசாளராக பதவி வகித்தபோது, பிரதேசசபை வாகனத்தில் உடுவில் மகளிர் கல்லூரியில் கல்விகற்கும் தனது பிள்ளைகளை ஏற்றி இறக்கியதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

அத்துடன் பிரதேசசபைக்குரிய வாகனத்தை தனது வீட்டிலேயே இரவில் தரித்து வைக்கிறார். இதையெல்லாம் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டிய போதும், அந்த விதிமீறல் தாராளமாக நடந்து வருகிறது.

இந்தநிலையில், பிரதேசசபைக்குரிய வாகனத்தில் தவிசாளரின் மனைவி பாடசாலைக்கு சென்று வரும் ஒளி ஆதாரத்தை தமிழ்பக்கம் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here