யாழில் கொடூரம்: குடும்ப பகை வாள்வெட்டில் முடிந்தது; இருவர் பலி!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பகுதியில் இரு குடும்பங்களிற்கிடையலான பகை, வாள்வெட்டு குழு மோதலாக உருவெடுத்ததில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

சுழிபுரம் மத்தி, குடாக்கனை பகுதியில் நேற்று (13) வெள்ளிக்கிழமை பின்னிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றைய ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போது உயிரிழந்துள்ளார்.

அதே இடத்தைச் சேர்ந்த சின்னவன் செல்வம் (56) மற்றும் இராசன் தேவராசா (31) என்ற இருவருமே உயிரிழந்துள்ளனர். ஒருவர் காயங்களும் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலையிலிருந்து முறுகல் நிலை காணப்பட்டுள்ளது. அதுதொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது. எனினும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரவில்லை என்று அந்தப் பகுதியைச் சேர்ந்தோர் தெரிவித்தனர்.

பின்னிரவில் ஒரு பகுதியினர் வாள்களுடன் மற்றைய பகுதியினரின் வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அதனால் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்தில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இரவிரவாக அப்பகுதில் பதற்றம் நிலவியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here