தீபாவளி திருநாளில் எண்ணெய் தேய்த்து குளிக்க உகந்த நேரம்!

இந்துக்களுக்கான பண்டிகைகளும் வழிபாடுகளும் ஏராளம். என்றாலும் மிக முக்கியமான பண்டிகையாக, உன்னதமான திருநாளாக, எல்லோரும் கொண்டாடப்படுகிற வைபவமாகப் பார்க்கப்படுவது… ‘தீபாவளித் திருநாள்’.

வாரந்தோறும் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கிற பழக்கம் இல்லாதவர்கள் கூட, தீபாவளித் திருநாளின் போது எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பண்டிகையின் தார்பர்யமும் இதுதான்.

தீபாவளி வைபவத் திருநாளில், காலையில் எண்ணெய் தேய்த்து, மருத்து நீர் தேய்த்து குளிப்பார்கள் மக்கள். குளித்துவிட்டு வந்து, புத்தாடை அணிந்துகொண்டு, இறைவனை வணங்குவார்கள். பின்னர், வீட்டிலுள்ள பெரியோரை வணங்குவார்கள். அதையடுத்து, பட்டாசுகள் வெடித்து, அக்கம்பக்கத்தாருடனும் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் சேர்ந்து கொண்டாடி மகிழ்வார்கள்.

தீபாவளித் திருநாளில், காலையில் எண்ணெய் வைத்துக்கொண்டு, வெந்நீரில் குளித்து, சிகைக்காய் தேய்த்துக் குளிப்பதற்கு உரிய நேரம் இதுதான் என்று ஆச்சார்யர்கள் நேரத்தைத் தெரிவித்துள்ளார்கள். 14ம் திகதி சனிக்கிழமை, அதிகாலையில் 4.30 முதல் 6 மணிக்குள், நீராடுவதற்கு உகந்த நேரம் என்று ஆச்சார்யார்கள் தெரிவித்துள்ளனர்.

தீப ஒளி நன்னாளில், உரிய நேரத்தில், நீராடுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here