ஆட்டுத் திருடனை பிடித்த பொலிசாருக்கு நேர்ந்த கதி!

ஹினிதும பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 16 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த அதிகாரிகளுக்கு இன்றைய தினம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஹினிதும பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட இரண்டு பேர், பூசா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் அவர்களிற்கு கொரோனா தொற்று உறுதியானது.

சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற, விசாரணையில் நெருக்கமாக ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டு சந்தேக நபர்களின் குடும்பங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. ஹினிதும காவல்துறையும் கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு சந்தேக நபர்களும் தஹம்வல மற்றும் ஹினிதும பகுதிகளில் கஞ்சா வைத்திருந்ததாகவும், ஆடு திருடியதாகவும் கைது செய்யப்பட்டனர்.

தற்போது ரிமாண்ட் காவலில் உள்ள இரண்டு சந்தேக நபர்களும் இந்த மாதம் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பூசா சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் கைதிகள் 12 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, சிறைக்கைதிகள் 172 பேருக்கு இதுவரை கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 தொற்றை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here