மன்னார் தள்ளாடி சந்தியில் விபத்து

மன்னாரில் இருந்து பிரதான பாலம் ஊடாக சென்ற டிப்பர் வாகனமும், திருக்கேதீஸ்வரம்- தள்ளாடி பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்த மோட்டார் கைக்கிளும் தள்ளாடி சந்தியில் இன்று(13) வெள்ளிக்கிழமை காலை சுமார் 8.15 மணியளவில் மோதி விபத்திற்கு உள்ளாகியதில் மோட்டார் சைக்கிலில் மன்னார் நோக்கி வந்த நபர் படுகாயம் அடைந்தார்.

படுகாயம் அடைந்த நபர் மன்னார் மாவட்டச் செயலகத்தில் புள்ளி விபர திணைக்களத்தில் கடமையாற்றுபவர் என தெரிய வந்துள்ளது.

குறித்த நபர் கடமையின் நிமித்தம், திருக்கேதீஸ்வரம்- தள்ளாடி பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிலில் வந்து கொண்டிருந்த போது, மன்னாரில் இருந்து பிரதான பாலம் ஊடாக சென்ற டிப்பர் வாகனத்துடன் தள்ளாடி சந்தியில் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதன் போது குறித்த நபர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் வீதிபோக்கு வரத்து பிரிவு பொலிஸார் குறித்த டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here