மன்னாரில் கண்டல் தாவரங்கள் நடப்பட்டது!

கடல் வளங்களை பாதுகாக்கும் வகையில் மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நருவிலிக்குளம் கடற்கரையோர பகுதியில் கண்டல் தாவரங்களை நடும் நிகழ்வு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(13) காலை இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட கடல் சார் சூழல் பாதுபாப்பு அதிகார சமையின் பொறுப்பதிகாரி ஏ.சசிதரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது கடல் சார் சூழல் பாதுபாப்பு அதிகார சமையின் தலைவர் திருமதி தஸ்சினி லகந்தபுர , கடல் சார் சூழல் பாதுபாப்பு அதிகார சமையின் வடக்கு கிழக்கு பொறுப்பதிகாரி ரி.சிறிபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நருவிலிக்குளம் கடற்கரையோர பகுதியில் முதல் கட்டமாக 300 கண்டல் தாவரங்கள் நாட்டி வைக்கப்பட்டது.

இதன் போது கிராம அலுவலகர்,பொலிஸ் அதிகாரி, வனவளத்திணைக்கள அதிகாரிகள், கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டு கண்டல் தாவரங்களை நாட்டி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here