பிட்டு படத்தை மிஞ்சிய இரண்டாம் குத்து படத்தின் அடுத்த வீடியோ

தமிழ் சினிமாவில் அடல்ட் படங்களை தைரியமாக இயக்கி வெற்றிகண்டவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இவரது இயக்கத்தில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘ஹர ஹர மஹாதேவகி’ ஆகிய அடல்ட் படங்கள் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி கண்டது.

தற்போது சந்தோஷ் ‘இரண்டாம் குத்து’ என்ற படத்தை இயக்கி, அதில் அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை வெளியாகி, தாறுமாறான விமர்சனங்களையும் பெற்றது.

இந்நிலையில் ஆபாசத்தின் உச்ச கட்டமாக ‘இரண்டாம் குத்து’ படத்தின் இரண்டு நிமிட வீடியோ காட்சி வெளியாகி இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஏற்கனவே வெளியான ‘இரண்டாம் குத்து’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசருக்கு கடும் எதிர்ப்புகள் இருந்த நிலையில் தற்போது இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

மேலும் இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்ததாகவும் சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் சந்தோஷ் தெரிவித்தார்.

தற்போது இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக இரண்டாம் குத்து படத்தின் இரண்டு நிமிட வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளார் சந்தோஷ்.

பிட்டு படத்தையே மிஞ்சும் அளவிற்கு உள்ள இந்த படத்தின் இரண்டு நிமிட காட்சிகளை கண்ட பலர் வாயடைத்துப் போய் நிற்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here