கொரோனா மதம் பார்த்து பரவுவதில்லை; முஸ்லிம்களின் உடலை அடக்கம் செய்யகூடாது: பிக்குகள் எதிர்ப்பு தொடர்கிறது!

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை தகனம் அல்லது அடக்கம் செய்வது, மத நம்பிக்கைகளால் அல்ல, சுகாதாரத்தால் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளால் தீர்மானிக்கப்பட வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் துணை பதிவாளர் நாரன்பனாவே ஆனந்த தேரர் நேற்று தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், இறந்த நபரின் உடலை அடக்கம் செய்வது உயிருள்ளவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தால், மத பரிந்துரைகளை ஒதுக்கி வைத்து உடல் தகனம் செய்யப்பட வேண்டும், அது பௌத்த, இஸ்லாமிய அல்லது இந்து மதமாக இருந்தாலும் அதை மத அடிப்படையில் கேள்வி கேட்கக்கூடாது. “ஒரு நாடு என்ற வகையில், நாங்கள் தற்போது ஒரு நெருக்கடியில் இருக்கிறோம், அதை சமாளிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நேரத்தில் இன மற்றும் மத பிளவுகளை உருவாக்க யாராவது முயன்றால் அது நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும்” என்று அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் இனம், மதம் அல்லது வேறு எந்த தொடர்பையும் பொருட்படுத்தாமல் உடலில் இருந்து உடலுக்கு பரவுகிறது என்றும் மக்கள் எந்த வகைப்பாடும் இல்லாமல் இறக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

இந்த பிரச்சினையில் பிளவுகளை உருவாக்குவது தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதாரத் துறை பல பரிந்துரைகளை செய்துள்ளதால், பொதுமக்கள் தங்கள் விருப்பப்படி செயல்படக்கூடாது, ஆனால் அந்த பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here