பிரசாந்தனிற்கு 23ஆம் திகதி வரை விளக்கமறியல்!

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுசெயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூபாலப்பிள்ளை பிரசாந்தனை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் உத்தரவிட்டார்.

கொழும்பிலிருந்து வந்திருந்த குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால், ஆரையம்பதி பகுதியில் வைத்து பிரசாந்தன் கைது செய்யப்பட்டார்.

ஆரையம்பதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அவர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்றக் குற்றச்சாட்டு தொடர்பில் கீழ் 2019ஆம் ஆண்டு மே மாதம் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது. அது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பிரசாந்தன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 23 திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

-பா.டிலான்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here