ஒதுக்கீட்டு சட்ட வாக்கெடுப்பில் பங்கு பற்றோம்: சுமந்திரன்!

கொரோனா அபாயத்தையடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் கணிசமான எம்.பிக்கள் இன்று நாடாளுமன்ற அமர்வில் கலற்து கொள்ளவில்லை. இந்த நிலையில், 2020 ஒதுக்கீட்டு சட்டம் மீதான வாக்கெடுப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு புறக்கணிக்கும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒதக்கீட்டு சட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. மாலையில் வாக்கெடுப்பு நடைபெறும்.

இந்த நிலையில், ஒதுக்கீட்டு வரைவு விசித்திரமானது, பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை மூடிமறைக்கும் செயல் என்றும் கூறியுள்ளார்.

“2020 நிதியாண்டில் எந்த சட்டமும் நிறைவேற்றப்படவில்லை. சில தீர்மானங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய தீர்மானங்கள் குறிப்பிட்ட பொது சேவைகளுக்கு மட்டுமே நிதி வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கின்றன, அபிவிருத்தி நோக்கங்களுக்காக அல்ல என்று கூறினார்.

இந்த ஆண்டு அரசியலமைப்பை மீறி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதில் அரசு அதிகமாக ஈடுபட்டுள்ளதகவும் சுமந்திரன் கூறினார்.

2020 ஒதுக்கீட்டு சட்டம் அரசாங்கத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கும் முயற்சி. இதனால் கூட்டமைப்பு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here