UPDATE: த.ம.வி.புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் கைது: சாட்சியங்களை அச்சுறுத்தினாராம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரையம்பதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று காலை அவர் கைது செய்யப்பட்டள்ளார்.

ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பில், சாட்சியங்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு – ஆரையம்பதி பகுதியில் 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி பாடசாலை ஆசிரியரான தமிழ்நாடு என அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை மனோகரன் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக கிருஸ்ணபிள்ளை மனோகரனின் சகோதரியொருவர் காத்தான்குடி பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது சாட்சியங்களை பிரசாந்தன் அச்சுறுத்தவதாக, கொலையுண்டவரின் சகோதரி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், சட்டமா அதிபரின் உத்தரவிற்கமைய பிரசாந்தன் கைதாகியுள்ளார்.

கடந்த பொதுத்தேர்தலில் ராஜபக்சக்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர், கோட்டாபய ஆட்சியில் அமர்ந்ததும் பிள்ளையான் விடுதலையாவார் என பகிரங்கமாகவே கூறி வந்தனர்.

எனினும், பிள்ளையான் விடுதலை செய்யப்படக்கூடிய நிலைமை தென்படாத நிலைமையில், தற்போது கட்சியின் இரண்டாம் நிலை தலைவரும் கைதாகியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here