பனிக்கன்குளத்தில் பயங்கர விபத்து: கனரக வாகனங்கள் மோதல்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏ-9 வீதியின் பனிக்கன்குளம் 232 வது கிலோமீற்றருக்கும் 233 வது கிலோ மீற்றருக்கும் இடைப்பட்ட பகுதியில் சற்று முன்னர் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது தெய்வாதீனமாக யாருக்கும் உயிர் சேதங்கள் இடம்பெறவில்லை.

வவுனியா நோக்கி பெக்கோ இயந்திரத்தை ஏற்றி வந்த வாகனம் ஒன்று வாகனத்தின் சில்லு காற்று போன காரணத்தினால் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வவுனியாவை நோக்கி வந்த இன்னுமொரு பாரவூர்தி வாகனம் குறித்த வாகனத்தில் மோதுண்டு இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

வாகனங்கள் கடுமையாக மோதுண்டு சேதமடைந்துள்ள போதும் தெய்வாதீனமாக உயிர் சேதங்கள் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அறியமுடிகிறது.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் மாங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here