முல்லைத்தீவில் கனமழை: ஒரு கிராமம் துண்டிப்பு; கடலுடன் சங்கமித்தது நாயாறு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த கன மழையால் அங்குள்ள பல குளங்களில் நீர் நிரம்பியுள்ளது. அத்துடன், நாயாறு கடல் நிரம்பி, கடலுடன் சங்கமித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையால்
காட்டாற்று வெள்ளங்கள் நாயாற்று கடல் நீர் ஏரிநோக்கி பெருக்கெடுத்து பாய்வதால் நாயாற்று கடல் நிரம்பி கடலுடன் சங்கமித்துள்ளது.

நாயாற்று பகுதி நீர் நிரம்பியதன் காரணமான புளியமுனை விவசாய கிராமத்திற்கான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று முன்தினம் (09)அதிகளவு மழைவீழ்ச்சி வெலிஓயா பிரதேசத்தில் பதிவானது. அங்கு 280 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

வெலிஓயா பிரதேசத்தில் அதிகளவான மழைவீழ்ச்சியினால் பல குளங்கள் நிரம்பி வான் பாய்கின்றன. விவசாய நிலங்கள் பல நீரில் மூழ்கியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here