யாழில் விபச்சார விடுதி சிக்கியது: இரண்டு அழகிகள் கைது!

யாழ்ப்பாணம், தென்மராட்சி, வரணி பகுதியில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளரும், இரண்டு விபச்சார அழகிகளும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (10) மாலை வரணி, கரம்பைகுறிச்சி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

அங்குள்ள விடுதியொன்றில் நீண்டநாட்களாக விபச்சாரம் நடந்து வந்தது. உள்ளூர்வாசிகளும், வெளியிடவாசிகளும் அங்கு சென்று வர தொடங்கியிருந்தனர். இதனா்ல் கிராமத்தில் கொந்தளிப்பு உருவாகியிருந்தது.

கொரோனா காலத்திலும் கட்டுப்பாடின்றி அங்கு விபச்சாரம் நடந்து வந்தது.

கொடிகாமம் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, நேற்று மாலை விடுதியை சுற்றிவளைத்தனர்.

இதன்போது, விடுதி உரிமையாளர், இரண்டு விபச்சார அழகிகள் கைதாகினர். யாழ்.நல்லூரடியை சேர்ந்த யுவதியும், கிளிநொச்சி விசுவமடு பகுதியை சேர்ந்த யுவதியும் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கைதாகினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here