படகுகளின் ஏலப்பணம் இந்திய படகு உரிமையாளர்களிடமே வழங்கப்படும்!

வட கடலில் நீண்டகாலமாக தரித்து நிற்கும் சுமார் 121 இந்திய மீன்பிடிக் படகுகளை ஏலத்தில் விடும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும், ஏலப்பணம் படகு உரிமையாளர்களிடமே வழங்கப்படும் கடற்றொாழில் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உரிமையாளர்களின் ஒப்புதலுடன் படகுகள் ஏலம் விடப்படும் என்றும், அந்தப் பணம் படகு உரிமையாளர்களிடம் இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஒப்படைக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

121 படகுகளில் 94 படகுகளை ஏலத்தில் விற்பனை செய்ய நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளது.

2015 மற்றும் 2018 க்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கை கடற்பரப்புக்களில் அத்துமீறி மீன்பிடித்த மீன்பிடி கலங்கள் காரைநகரில் உள்ள எல்லார கடற்படைத் தளத்தில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here