முல்லைத்தீவில் கரையொதுங்கிய இலட்சக்கணக்கான மீன் குஞ்சுகள்!

முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் பகுதியில் நேற்று (10)திடீரென பல இலட்சக் கணக்கான மீன் குஞ்சுகள் கரையொதுங்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நந்திக்கடலில் இருந்து இரட்டைவாய்க்கால் ஊடக முல்லைத்தீவு பெரும் கடற்கரைக்கு சங்கமிக்கும் வாய்க்காலிலேயே இவ் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை தாெடக்கம் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாகவே இன்று இவ் மீன் குஞ்சுகள் உயிருடன் கரையொதுங்கியுள்ளது.

இவ்வாறு கரையொதுங்கிய உயிர் மீன்குஞ்சுகள் கெழுத்தி இன வகையை சார்ந்த மீன் குஞ்சுகளே ஆகும். இவ் கரையொதுங்கிய மீன் குஞ்சுகளை பொதுமக்கள் அதிசயத்துடன் பார்வையிடுவதோடு வலை வீசியும் பிடித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here