கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் குணமடைந்த 18 கொரோனா நோயாளிகள் வீடு திரும்பினர்!

யாழ்ப்பாணம் கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைகளை முடித்து 18 பேர் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே ஒரு கொரோனா வைத்தியசாலை இருந்த நிலையில், கோப்பாய் ஆசிரியர் கல்லலூரியும் கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. மாகாணத்திற்குட்பட்ட மருதங்கேணி வைத்தியசாலைக்கு, மத்திக்குட்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை எந்த ஆளணி உதவியும் வழங்காமல், இரண்டாவது கொரோனா வைத்தியசாலையை ஆரம்பித்தனர்.

இவ்வாறு கோப்பாய் Covid-19 சிறப்பு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைகளை முடித்த தென்பகுதி மாவட்டங்களைச் சேர்ந்த 18 பேர் இன்று அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Covid-19 தடுப்பு ஆலோசனை மற்றும் நோய் நிர்ணய அட்டைகள் வழங்கப்பட்டதுடன் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி தலைவரின் சம்மதத்துடன் ஒவ்வொருவருக்கும் கல்லூரியில் இருந்த வேப்பமரகன்று வழங்கி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here