வவுனியாவில் பரிதாபம்: மலசலகூடத்திற்கு வெட்டிய குழியில் விழுந்து சிறுமி பலி!

வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்த குளம் பகுதியில் புதிதாக வெட்டப்பட்ட மலசலகூட குழியில் விழுந்து சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இன்றையதினம் சிறுமியின் பெற்றோர் வெளியில் சென்றநிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தவறுதலாக மலசல கூடக்குழியில் விழுந்துள்ளார்.

இதனை அவதானித்த சிறுமியின் உறவினர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் குறித்த சிறுமி சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்துள்ளார்.

சம்பவத்தில் ஓமந்தை பன்றிக்கெய்த குளம் பகுதியை சேர்ந்த சத்தியசீலன் சயீவினி (6) என்ற சிறுமியே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலசல கூடத்திற்காக புதிதாக வெட்டப்பட்ட குழியில் மழை நீர் நிரம்பியிருந்த நிலையில் சிறுமி அதனுள் விழுந்து சாவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here