முல்லைத்தீவு- கரிப்பட்டமுறிப்பு வயலில் வெடிபொருட்கள், மனித எச்சங்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு பகுதியில் மனித எச்சங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாங்குளம் வீதியின் ஒன்பதாவது கிலோ மீட்டர் பகுதியில் கரிப்பட்டமுறிப்பு சந்திக்கு அருகாமையில் உள்ள வி.சிவசுப்பிரமணியம் என்பவரது வயல் காணி துப்பரவு செய்து அந்தக் காணியில் நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த காணி பெக்கோ இயந்திரங்கள் மூலம் துப்பரவு செய்யப்பட்டு மீண்டும் உழவு இயந்திரம் மூலம் உழவு செய்யப்பட்டு நெல் விதைக்கப்பட்ட நிலையில் மண்வெட்டி கொண்டு குறித்த வயல் நிலங்களுக்கான வரம்புகளை அமைக்க முற்பட்டபோது வெடிபொருள் இருந்தை அவதானித்தவர்கள், மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டு கடந்த மூன்றாம் திகதி வெடிபெருட்களை பார்வையிட்ட போது இவ்வாறு மனித எச்சங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 3ஆம் திகதி முதல் இன்றுவரை அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கின்றது.

இன்றைய தினம் நீதிபதி அவர்கள் வருகை தந்து குறித்த இடத்தை பார்வையிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here