விக்கி வழக்கை விரைந்து முடிக்க மைத்திரி உத்தரவு!

வடக்கு முதலமைச்சருக்கு எதிராக பா.டெனீஸ்வரன் தரப்பு முன்னெடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் 18ம் திகதி வழக்கு தவணையிடப்பட்டுள்ளதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். அன்றைய தினமே, இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதற்கான வாய்ப்புக்களே மிக அதிகமாக உள்ளதாக வழக்குடன் தொடர்புடைய சட்ட வட்டாரங்களில் இருந்து தமிழ்பக்கம் அறிந்துள்ளது.

முதலமைச்சருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் 20ம் திகதிக்குள் விரைந்து நடத்தி, முடிவொன்றை எட்டுமாறு ஜனாதிபதியிடமிருந்து உத்தரவு கிடைத்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர். வழக்கின் தீர்ப்பு அனேகமாக, முதலமைச்சரிற்கு பாதிப்பில்லாததாகவே இருக்குமென்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்றைய வழக்கு விசாரணையின் போது, வழக்கை விரைந்து நடத்தி முடிப்பதை பற்றி நீதிபதி சூசகமாக குறிப்பிட்டிருந்ததும் சுட்டிக்காட்டத்தக்கது.

ஜனாதிபதி தரப்பிலிருந்து ஏன் இந்த உத்தரவு வந்தது என்பதை அறிய முடியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here