காரைதீவு பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்

காரைதீவு பிரதேசசபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது .

33வது சபை அமர்வின் போது புதிய ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட அறிக்கையை காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிரில் தலைமையில் இன்று (10) சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது சபையின் தவிசாளர் உள்ளிட்ட 12 உறுப்பினர்களின் பங்களிப்பில் ஏகமானதாக வரவு – செலவுத் திட்ட அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது

இதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 02 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 02, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 01, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4 ,தோடம்பழம் சுயேட்சை குழு 01 , காரைதீவு சுயேட்சை குழு 2 என மொத்தமாக 12 உறுப்பினர்கள் சபையில் அங்கம் வகிக்கும் 12 உறுப்பினர்களும் ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது சபை நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக அம்பாறை மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மட்டக்களப்பு மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here