கொரோனாவால் முக்கிய கைதிகள் வேறு விடுதிகளிற்கு மாற்றம்!

வெலிக்கடை சிறை வைத்தியசாலையை கொரோனா தொற்றாளர்களிற்கு சிகிச்சையளிக்கும் மையமாக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது அங்கு சிகிச்சை பெற்றுவரும் சுமார் 150 கைதிகளை மகர சிறைக்கு மாற்ற சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொலைக்குற்றவாளிகளான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜெயசேகர மற்றும் குழுவின் மற்றவர்களை மருத்துவ ஆலோசனையின் பேரில் தனி விடுதியில் தங்க வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் பரவும் கொரோனா தொற்றையடுத்து, நூறிற்கும் அதிக கைதிகள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here