மலையகத்தில் தமிழ் பெயரில் பௌத்த விகாரை!

இன்று நாட்டில் மதம் தொடர்பிலான பிரச்சினைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. எங்கள் மதம் பெரிதா உங்கள் மதம் பெரிதா என்றும் மதம் பிடித்து திரிபவர்களின் மத்தியில் தமிழ் பெயரில் பௌத்த விகாரை ஒன்று இருப்பதை கேள்விபட்டு இருக்கின்றீர்களா?

கண்டி மாவட்டத்தின் கம்பளை தொழுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புப்புரஸ்ஸ கிராம சேவகர் பிரிவிலேயே “சுப்பிரமணியராமய” என்ற தமிழ் பெயரில் இந்த விகாரை காணப்படுகின்றது.

மலையக தோட்டத்துறை வரலாற்றில் தோட்டங்கள் ஒரு காலத்தில் தனியாருக்குச் சொந்தமானதாக காணப்பட்டது. அவ்வாறான நிலையில் இந்திய வம்சாளியை சேர்ந்த சுப்பிரமணியம் முதலாளி புப்புரஸ்ஸ தோட்டத்தை நிர்வகித்து வந்தார். அந்த அந்நேரத்தில் தமது தோட்டத்தில் ஒரு விகாரை அமைக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை அவரது மனதில் உருவானது.

அதற்கமைய தனது சொந்த காணியில் பௌத்த விகாரைக்கு என ஒரு பகுதியை வழங்கி 1958 ஆம் ஆண்டு இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார். இவரது பெயர் எம்.எம்.சுப்பிரமணியம் என்பதனால் “சுப்பிரமணியராமய” என விகாரைக்கு பொறுப்பாக இருந்த வணக்கத்திற்குரிய அமரர் ஸ்ரீ விமலானந்த தேரர் அவர்களினால் இந்த பெயர் சூட்டப்பட்டது தற்போதும் அந்த பெயரிலேயே காணப்படுகின்றது.

இவரது தோட்டத்தில் பௌத்த விகாரை அமைந்ததோடு அந்த பிரதேசத்தில் சிங்கள குடியேற்றங்கள் ஏற்பட்டதுடன் ஒரு புப்புரஸ்ஸ என்ற ஒரு சிறிய நகரமும் உருவானது. தற்போது இந்த பிரதேசத்தில் தமிழர்களும், சிங்களவர்களும் வாழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக இந்த “சுப்பிரமணியராமய” இந்த பிரதேசத்தில் பௌத்த மத சார்பான விடயங்களையும் தாம் பாசல் என அழைக்கப்படும் அறநெறி பாடசாலையும் பௌத்த மக்களுக்கும், இந்து மக்களுக்கும் தேவையான விடயங்களை செய்து வருகின்றது. இதற்கு காரணமாக இருந்த அமரத்துவம் அடைந்த ஸ்ரீ விமலானந்த தேரர் ஆவார். இவர் இந்த விகாரையை பல வருடங்களாக நிர்வகித்து வந்ததுடன் பிரதேச மக்களுக்கு ஆன்மீக ரீதியில் பல சேவைகளை செய்து வந்துள்ளார்.

இடைக்காலப்பகுயில் இந்த பெரை மாற்றுவதற்கு பலர் முயற்சித்த போதும் தேரர் அதனை செய்யவிடவில்லை. இவ்வாறு நம் முன்னோர்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக வாழ்ந்து வந்துள்ளமை சமூகத்திலுள்ள ஏனையயோருக்கு ஒரு எடுத்து காட்டாகும்.

பா.திருஞானம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here