உழவு இயந்திரம் தடம் புரண்டதில் 18 வயதுடைய இளைஞர் பலி!

உன்னிச்சை, கரவெட்டியாறு வயற்பிரதேசத்தில் உழவு இயந்திரம் தடம் புரண்டதில் 18 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் (08) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் அருணாச்சலம் அஜித்குமார் என்பவரே உயிரிழந்தவரென, ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆயித்தியமலை பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here