விக்னேஸ்வரனிடம் சுமந்திரன் சொன்ன இரகசியம்: மேன்முறையீட்டு நீதிமன்ற விசாரணையின் பின் சுவாரஸ்யம்!

வடக்கு அமைச்சரவை சர்ச்சையையடுத்து பா.டெனீஸ்வரனால் தெடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இன்று முன்னிலையாகியிருந்தார். வழக்கு விசாரணையின் பின்னர் இடம்பெற்ற சுவாரஸ்ய சம்பவமொன்று பற்றிய தகவல்களை தமிழ்பக்கம் திரட்டியுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் மேல்தளத்தில் இயங்குகிறது. விசாரணையின் பின்னர், முதலமைச்சர் க.வி.விக்கேஸ்வரன், முதலமைச்சரின் சட்டத்தரணி கனகஈஸ்வரன், பா.சத்தியலிங்கம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், மற்றும் சில சட்டத்தரணிகள் உட்கார்ந்து சுமுகமாக பேசிக் கொண்டிருந்தனர்.

கடந்த சில நாட்களாக வார்த்தைப் போரில் ஈடுபட்ட முதலமைச்சரும், சுமந்திரனும் சகஜமாக சிரித்தபடி உரையாடிக் கொண்டிருந்தனர். பேச்சின் இடையில், இந்த வழக்கை பற்றி சுமந்திரன் குறிப்பிட்டார். “இந்த வழக்கு யாரையும் பிடித்து உள்ளே போடுவதற்காக போடப்பட்ட வழக்கல்ல. அரசியலமைப்பில் மாகாணசபை முறைமையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்ட கிடைத்த சந்தர்ப்பமாகவே நாம் பயன்படுத்துகிறோம்“ என குறிப்பிட்டார்.

தற்போதுள்ள மாகாணசபையின் எச்சசொச்ச அதிகாரங்களையும் குறைக்கும் விதமான இந்த வழக்கு மக்கள் மத்தியில் அதிருப்தியை கிளப்பியதன் பின்னர், டெனீஸ்வரன் தரப்பு இப்படியான மேலோட்டமான காரணமொன்றை முன்வைப்பது குறிப்பிடத்தக்கது.

இதனாலோ என்னவோ, இந்த சமயத்தில் முதலமைச்சர் அதை கவனிக்காததை போல உட்கார்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here