‘நாட்டமைகள்’ மத்தியில் அதிக கொரோனா பரவல்!

கொழும்பு மெனிங் சந்தையில் பாரந்தூக்குபவர்கள் (நாட்டாமைகள்) மீதான பிசிஆர் சோதனை முடியும் வரை, சந்தை மீளத்திறக்கப்படாது என பதில் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பாரந்தூக்குபவர்கள் பலர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று (9) காலை மெனிங் சந்தை திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், சந்தையுடன் தொடர்புடைய அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, சந்தையை திறக்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் சந்தை மூடப்பட்டிருப்பதாகவும், காவல்துறை, சுகாதார அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை சேவைகள் பாரந்தூக்குபவர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பரவுவதை உறுதிசெய்துள்ளதாகவும், சுகாதார வழிகாட்டலுக்கமைய சரியான நேரத்தில் சந்தை திறக்கப்படும் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here