ட்ரம்பை கைகழுவுகிறார் மனைவி மெலனியா?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அவரது மனைவி மெலானியா, ட்ரம்ப்பை விவகாரத்து செய்ய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சிஎன்என் வெளியிட்ட செய்தியில், “அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தோல்வி காரணமாக மெலானியா, டொனால்ட் ட்ரம்ப்பை விவகாரத்து செய்ய இருப்பதாக சுற்றுவட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து மெலானியா ட்ரம்ப்பின் பெயர் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மெலானியா ட்ரம்ப் தரப்பிலிருந்து வெளியாகவில்லை.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர் கமலா ஹாரிஸ் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றிக்குத் தேவைப்படும் 270 பிரதிநிதி வாக்குகளில் 266 இடங்கள் பெற்று முன்னிலையில் இருந்தநிலையில், பென்சில்வேனியா மாகாணத்தில் 20 பிரதிநிதிகள் வாக்குகளும் ஜோ பைடனுக்குக் கிடைத்ததால் அவரது வெற்றி உறுதியானது. இதையடுத்து, 290 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றதையடுத்து, தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ட்ரம்ப் 214 பிரதிநிதிகள் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here