மண்டைதீவில் தனியார் காணிகளை கடற்படைக்காக நாளை சுவீகரிக்க முயற்சி!

யாழ் மண்டைதீவு பகுதியில் நாளை கடற்படையினரின் தேவைக்காக பொதுமகன் ஒருவரின் காணி அளவீடு செய்யப்படவுள்ளது.

மண்டைதீவு ரி ஜங்சன் பகுதியிலுள்ள கால் ஏக்கர் காணி நாளை காலை 8.30 மணிக்கு அளவீடு செய்யப்படவுள்ளது.

விக்னேஸ்வரன் ஞானேஸ்வரன் என்ற தனிநபருக்கு சொந்தமான இந்த காணியை, கடற்படையினரின் தேவைக்காக நிரந்தரமாக சுவீகரிக்க நடவடிக்கையெடுக்கப்படவுள்ளது.

காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்த நாளை போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக வலி வடக்கு உறுப்பினர் எஸ்.சஜீவன் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இந்த போராட்டத்தி்ல் கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here