செம்மணி படுகொலை அஞ்சலி நிகழ்வு!

ஈழத்தமிழர்களை உலுக்கிய- மாபெரும் மனிதப் புதைகுழியான செம்மணி புதைகுழியை உலகிற்கு அடையாளம் காட்டிய- பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமியின் 22வது நினைவுநாள் இன்று அனுட்டிக்கப்பட்டது.

சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவியான கிருஷாந்தி பாடசாலை முடிந்து வீடு திரும்பும் வழியில் செம்மணி முகாம் படையினரால் வழிமறிக்கப்பட்டு பாலியல் வன்கொடுமையின் பின்னர் கொல்லப்பட்டிருந்தார். அவர் கைதானதும் அவரை தேடிச்சென்ற தாயார், சகோதரர், உறவினரும் கொல்லப்பட்டிருந்தனர்.

கொல்லப்பட்ட அனைவரும் இன்று நினைவு கூரப்பட்டனர்.

வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்வில் வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், மாகாணசபை உறுப்பினர்களாக ச.சுகிர்தன், சபா.குகதாஸ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அஞ்சலி நிகழ்வின் போது பாடசாலை மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here