யாழில் நாமலின் கூட்டம்: கஜேந்திரர்கள் மட்டும் ‘மிஸ்ஸிங்’!

கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் பொருட்டு ஸ்தாபிக்கப்பட்ட சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுவின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிற்கான கூட்டம் இன்று யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில், இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதனும், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ல்ஸ், இராஜாங்க அமைச்சர்கள், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், சீ.வி.விக்னேஸ்வரன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், அமைச்சிக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் பணிப்பாளர்கள், முப்படைகளின் பிரதானிகள், யாழ்.மாவட்ட உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here